மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

அண்ணா சாலையின் பள்ளத்துக்கான காரணம்!

அண்ணா சாலையின் பள்ளத்துக்கான காரணம்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள டி.எம்.எஸ் வளாகம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று சாலையின் ஓரத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, சிமென்ட் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவரும் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகம் அருகே நேற்று (ஜனவரி 26) திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் மேலாளர் அரவிந்த் ராய் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார்.

“பொதுவாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும்போது, டயஃபிராம் (diaphragm) சுவர்கள் வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டிலிருந்து இந்தப் பணிக்காக உருவாக்கப்படும். இந்தச் சுவர் உருவாக்கப்பட்டதும், அடியில் உள்ள மண்ணை எடுத்துவிடுவார்கள். பிறகு மேலுள்ள டயஃபிராம் சுவரைச் சாலைக்கும் மேலிருந்து இரண்டரை மீட்டரை துண்டித்து எடுத்துவிட்டு, மணலை நிரப்பி சாலை அமைக்க வேண்டும்.

டயஃபிராம் சுவரைத் துண்டிப்பதற்குச் சுவரின் இருபுறமும் மூன்றடிக்கு நேற்று முன்தினம் இரவு குழிதோண்டப்பட்டு இருந்தது. அதன்பின்பு மண்ணின் தன்மை ஈரமாக இருந்ததால் மண் சரிந்து விழுந்ததால்தான் இந்தப் பள்ளம் ஏற்பட்டது. அதன்பின்பு நேற்று ஒரு மணி நேரத்தில் இந்த மூன்றடி பள்ளத்தை மூடினோம். இதுவே இந்த மூன்றடி பள்ளத்துக்குக் காரணம்” என்று மெட்ரோ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 27 ஜன 2018