மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

நார்வே சர்வதேச திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

நார்வே சர்வதேச திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

நார்வேயில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளவிருக்கும் தமிழ்ப் படங்கள் குறித்த அறிவிப்பில் அறம், அருவி, விக்ரம் வேதா ஆகிய படங்கள் அதிக விருதுகளைப் பெறும் படங்களாகப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

உலகத் தமிழர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றாக கலந்துவிட்ட தமிழ் சினிமாவை, உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக நார்வேயில் தமிழ்த் திரைப்பட விழா நடத்தப்படுகிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் இந்த விழாவில் சிறந்த தமிழ்ப் படங்களைத் தேர்ந்தெடுத்து ‘தமிழர் விருது’ வழங்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாமல் சர்வதேச திரைப்படங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுவருகிறது.

அதன்படி, 9ஆவது நார்வே தமிழ்த் திரைப்படவிழா வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. ஆகவே, பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்பிவைக்கும்படி நார்வே திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சிவலிங்கம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு வெளியான 200 தமிழ்த் திரைப்படங்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. அதிலிருந்து 20 படங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. இதில், நயன்தாரா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ‘அறம்’ சிறந்த திரைப்படமாகவும், அந்தப் படத்தை இயக்கிய கோபி நயினார் சிறந்த இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைப் போல, ‘விக்ரம் வேதா’வில் சிறப்பாக நடித்திருந்த மாதவன் சிறந்த நடிகராகவும், ‘அருவி’யில் அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற அதிதி பாலன் சிறந்த நடிகையாகவும், ‘குரங்கு பொம்மை’யில் குணச்சித்திர நடிப்பைக் காட்டிய பாரதிராஜா வாழ்நாள் சாதனையாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாது துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன் விபரங்கள் பின்வறுமாறு:

சிறந்த இசையமைப்பாளர்: சாம்.சி.எஸ் (விக்ரம் வேதா)

சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.ஆர்.பிரபு (அருவி)

சிறந்த பாடலாசிரியர்: விவேக் ( ஆளப்போறான் தமிழன், மெர்சல்)

சிறந்த துணை நடிகர்: வேலராமமூர்த்தி (தொண்டன், வனமகன்)

சிறந்த திரைக்கதை: புஷ்கர்-காயத்ரி (விக்ரம் வேதா)

சிறந்த துணை நடிகை: அஞ்சலி வரதன் (அருவி)

சிறந்த பாடகர்: அனிருத் (யாஞ்சி யாஞ்சி)

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோஷல் (நீதானே நீதானே)

சிறந்த படத்தொகுப்பாளர்: ரெய்மண்ட் (அருவி)

சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி வர்மன் (காற்று வெளியிடை).

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018