மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

நெடுஞ்சாலை விபத்துக்கு உதவி எண்!

நெடுஞ்சாலை விபத்துக்கு உதவி எண்!

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறித்து தெரிவிக்கவும், அவசர உதவிக்காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தலைவர் தீபக் குமார் கூறுகையில், "நாடு முழுவதும் 1033 என்ற ஒரே கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும்தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே.

தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த வாகனங்கள் மீட்புப் பணிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம்" என கூறினார்.

இந்தத் திட்டத்துக்காக தேசிய நெடுஞ்சாலையின் முழுக் கணினி அமைப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் துணை அமைப்பு ஒன்று உருவாக்கி உள்ளது. விபத்து மட்டுமின்றி,ஆள் இல்லாத இடத்தில் வாகனம் பழுதடைந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018