மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் !

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் !

விவசாயத்துக்கு தனி பட்ஜெட் வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய மாநில அரசுகள் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்தது வருகின்றன. குடியரசுத் தினத்தையொட்டி தெலுங்கானா மாநிலம் சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநர் நரசிம்மன் கொடியேற்றினார். அங்கு பேசிய அவர், அடுத்த வருடத்திலிருந்து தெலுங்கானா மாநிலத்தில் விவசாயத்துக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். ஏற்கனவே ஆந்திரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில், தெலுங்கானாவிலும் அறிவிக்கபட்டுள்ளது.

இதுபோல தமிழகத்திலும் விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜனவரி 27) அறிக்கை வெளியிட்டுள்ளார். "விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்ததும், இந்த விஷயத்தில் அரசுக்கு வழிகாட்டும் வகையில் கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதி அறிக்கை தாக்கல் செய்து வருவதும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆனால், தமிழகத்தின் நிலை என்ன? என்பதை சிந்தித்துப் பார்த்தால் பெரும் ஏமாற்றமும், வேதனையும் தான் மிஞ்சுகிறது. காமராஜர் காலத்திற்கு பிறகு தமிழகத்திலிருந்து ஒரு நீர்ப்பாசனத் திட்டமும் செயல்படுத்தப் படவில்லை. மேலும் அவர் ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் சொந்த நிதியில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தமிழகம் மட்டும் அனைத்துக்கும் இலவு காத்தக் கிளியாய் மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்று அன்புமணி குற்றம் சாட்டினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018