மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பாலிவுட் ரீமேக்கில் ஜெயம் ரவி

பாலிவுட் ரீமேக்கில் ஜெயம் ரவி

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்து வெளியான படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, தனது 25ஆவது படமாக உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து பணிபுரியவிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் ரீமேக் ஒன்றில் நடிக்க ஜெயம் ரவி ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பேபி’. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களின் இயக்குநர் அஹமத். இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018