மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

அட்வைஸ் சொல்லும் கார்த்திக் நரேன்

அட்வைஸ் சொல்லும்  கார்த்திக் நரேன்

’துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் கார்த்திக் நரேன் புதுமுக இயக்குநர்களுக்கு அறிவுரை விடுத்துள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தை 'ரஹ்மானை' கதாநாயகனாக வைத்து இயக்கி அனைத்து மூத்த கலைஞர்களாலும் பாராட்டப்பட்டவர் தான் கார்த்திக் நரேன். தற்போது பல இளைஞர்கள் சினிமாவின் மீது காதல் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்திவருகின்றனர். அவர்களில் பலர் சினிமாத் துறையைக் கனவாகவே கொண்டு பின்வாங்கி வேறு துறையைத் தேர்ந்து காலம் முழுவதும் கஷ்டத்தோடு வாழ்ந்துவருகிறார்கள்.

அவர்களுக்கு தன் ஒரே படத்தின் படத்தின் மூலம் ரசிகர்களைக் குவித்த இளம் இயக்குநரான கார்த்திக் நரேன் தற்போது 'அரவிந்த் சாமி'யை வைத்து 'நரகாசூரன்' என்ற தலைப்பில் தனது அடுத்த படைப்பை முடித்துள்ளார். இவர் தற்போது சினிமாவில் தடம் பதிக்க ஆசைப்படுபவர்களுக்கு தன் [ட்விட்டர்] ( https://youtu.be/E5Fj39DuXPc) பக்கத்தில் செய்வது மற்றும் செய்யக்கூடாதது என்ற தலைப்பில் அவரது சொந்தக் கருத்தை அறிவுரையாக விடுத்துள்ளார்.

அதில் அவர், “தங்களுடைய கதைக் கருவை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதில் நீங்கள் உங்களுக்கான கதையை எழுதி முடித்தவுடன் அதை உங்களுக்கு நம்பகமான நபர்களிடம் மட்டும் பகிர்ந்துகொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார். இரண்டாவதாக, “சினிமா என்றவுடன் உங்களுக்கு அறிவுரை என்ற பெயரில் உங்களுடைய சினிமா ஆர்வத்தைக் கெடுப்பார்கள். அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்” மூன்றாவதாக, ”ரிஜக்ஷன் அதாவது நிறைய இடத்தில் நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள். அதைச் சற்றும் பொருட்படுத்தாது உங்கள் பாதையில் செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 27 ஜன 2018