மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ சேவை!

சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ சேவை!

சென்னை சென்ட்ரலிலிருந்து சென்னை விமான நிலையம் வரை செல்வதற்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுன்ட் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

நேரு பூங்கா-சென்னை சென்ட்ரல் இடையேயான இரண்டரை கிலோமீட்டர் தொலைவு கொண்ட சுரங்க வழித்தடத்தில் நேற்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அப்போது, மெட்ரோ ரயில் தண்டவாளம், மின்மயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுன்ட் வழித்தடத்தில் உள்ள நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே மார்ச் மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேரு பூங்கா- சென்னை சென்ட்ரல் இடையேயான பணிகள் நிறைவு பெற்றதன் மூலம் 2ஆம் வழித்தடம் (சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுன்ட்) முழுவதும் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி மார்ச் மாதம் முதல் செயின்ட் தாமஸ் மவுன்ட், சின்னமலை மற்றும் விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனி 27 ஜன 2018