நீலகிரி தேயிலை உற்பத்தி உயர்வு!

2017ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலை உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தி அளவு 28.81 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஒரு ஆண்டில் மொத்தம் 11.94 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை நீலகிரியைச் சேர்ந்த தேயிலை உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செய்திருந்தன. இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் 28.81 சதவிகித உயர்வுடன் மொத்தம் 15.38 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி அளவானது ஐந்தாண்டு சராசரியை விட 9.62 சதவிகிதம் அதிகமாகும். அதாவது, முந்தைய ஐந்து ஆண்டுகளுக்கான உற்பத்தி அடிப்படையில் 2017ஆம் ஆண்டில் 14.03 மில்லியன் கிலோ அளவிலான தேயிலை மட்டுமே உற்பத்தியாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்ததாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.