மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

புலிகள் கணக்கெடுப்பு: 7 நாட்கள் காப்பகம் மூடல்!

புலிகள் கணக்கெடுப்பு: 7 நாட்கள் காப்பகம்  மூடல்!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் நாளை(ஜனவரி 28) முதல் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற இருப்பதால், 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு 2007ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. நடப்பாண்டு நான்காவது தேசிய புலிகள் கணக்கெடுப்பு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் குழுவினர்களுக்கு பாபநாசத்தில் இன்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.புலிகள் கணக்கெடுக்கும் பணிக்காக களக்காடு புலிகள் காப்பகம் இன்று மூடப்பட்டது.

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, கரடி, யானை, கடமான், செந்நாய், சிங்கவால்குரங்கு, கருமந்தி உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன.

இதுகுறித்து முண்டந்துறை காப்பாக இயக்குநர் பார்கவதேஜா கூறுகையில், தமிழகத்தில் இரண்டாவது பெரிய புலிகள் சரணாலயமாக முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள 50 பீட்டுகளில் ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு பணி நடப்பதால், அம்பை பிரிவில் வனச்சரகர் மற்றும் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட 200 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள், வனப்பகுதிக்குள் 29 பிரிவுகளாக பிரிந்து சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதைத் தொடர்ந்து மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி, காரையாறு வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018