மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

மாணவர் சங்கம்: போராட்டம் தீவிரப்படுத்தப்படும்!

மாணவர் சங்கம்: போராட்டம் தீவிரப்படுத்தப்படும்!

பேருந்து கட்டண உயர்வை அரசு திரும்ப பெறாவிட்டால் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 29) முதல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் உச்சி மாகாளி தெரிவித்துள்ளார்.

போராட்டத்தின்போது கைதான 16 மாணவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், போராட்டத்தை ஒடுக்க மாணவர் சங்க நிர்வாகிகளைக் காவல் துறையினர் மிரட்டுவதாகவும் உச்சி மாகாளி குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணத்தை ஜனவரி 20 முதல் அரசு இரு மடங்காக உயர்த்தியுள்ளதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சாலை மறியல் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018