மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பிரபுதேவாவின் புதிய இசை ஆல்பம்!

பிரபுதேவாவின் புதிய இசை ஆல்பம்!

நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா குடியரசு தினத்தைப் போற்றும் விதமாக ஃபேஸ் ஆப் இந்தியா என்ற இசை ஆல்பத்தைத் தயாரித்துள்ளார்.

நடிகர், நடனக் கலைஞர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் பிரபுதேவா. சமீபத்தில் ஆக்‌ஷன் - காமெடி ஜானரில் வெளியான குலேபகாவலி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல திரைப்படங்களில் பணியாற்றிவரும் இவர் தற்போது இந்தியாவின் 69ஆவது குடியரசு தினத்தைப் போற்றும் விதமாக ஃபேஸ் ஆப் இந்தியா என்ற மியூசிக் ஆல்பத்தைத் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேசுடன் இணைந்து தயாரித்துள்ளார். நாட்டுப்பற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த இசை ஆல்பத்தின் டீசரை நேற்று (ஜனவரி 26) இரவு ஆர்ஜே பாலாஜி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ‘எங்க நாடே இந்தியா’ எனத் தொடங்கும் இப்பாடலில் இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களிலும் மொழிகளிலும் இருக்கும் சிறப்பம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018