மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பத்திரிகையாளர் வேடத்தில் ஐஸ்வர்யா

பத்திரிகையாளர் வேடத்தில் ஐஸ்வர்யா

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகியுள்ள சொல்லிவிடவா படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் அட்லீ.

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் சொல்லிவிடவா படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாகக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் காதலின் பொன் வீதியில் எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பெயர் சொல்லிவிடவா என மாற்றப்பட்டது. காதல், காமெடி, ஆக்ஷன் என உருவாகும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு ஜோடியாகத் தமிழில் ஹீரோவாக சந்தன் அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 27 ஜன 2018