மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பரவிவரும் காய்ச்சல்: பரிதவிப்பில் மருத்துவமனை ஊழியர்கள்!

பரவிவரும் காய்ச்சல்: பரிதவிப்பில் மருத்துவமனை ஊழியர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பரவிவரும் மர்மக் காய்ச்சலால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தட்டார்மடம், புத்தன்தருவை, படுகைப்பற்று, சடையன்கிணறு உள்ளிட்ட 40க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த மர்மக் காய்ச்சல் காரணமாக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அதிகமான பொதுமக்கள் வருகின்றனர்.

காய்ச்சல் பாதிப்பில் ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கு வருவதால், அவர்களை சமாளிக்க முடியாமல், மருத்துவமனை ஊழியர்கள், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளை நாடிவருகின்றனர். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததே இதற்குக் காரணம் என ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் பொதுமக்கள் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018