மின்னணு சாதனங்களின் வரி குறையுமா?

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களுக்கான வரியைக் குறைக்க வேண்டும், இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களுக்கான சுங்க வரியை உயர்த்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் அரசிடம் முன்வைத்துள்ளன.
வீட்டு உபயோகப் பொருட்களான குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், ஏசி போன்றவை ஆடம்பரப் பொருட்களுக்கான பட்டியலில் இல்லை. எனவே இவை மக்களால் எளிதில் வாங்கும் வகையில் விலைக் குறைவாக இருக்க வேண்டும். இவற்றுக்கான வரிகள் குறைக்கப்பட்டால் தான் விலைக் குறைவு என்பது சாத்தியமாகும். வீட்டு உபயோக மின்னணு சாதனங்களுக்குத் தற்போது சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 28 சதவிகித வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று மின்னணு உபகரணத் தயாரிப்பாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.