மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ட்விட்டர்: முதல்வர் கணக்குக்கு ‘வெரிபைட்’ அந்தஸ்து!

ட்விட்டர்: முதல்வர் கணக்குக்கு ‘வெரிபைட்’ அந்தஸ்து!

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு டுவிட்டர் வலைத்தளம் வெரிபைடு அந்தஸ்தை வழங்கியுள்ளது.

ட்விட்டரில் ஒருவரின் பேரில் பல்வேறு போலி கணக்குகள் இருந்து வருகின்றன. இதனால் அவ்வப்போது தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. தமிழகத்தைக் எடுத்துக்கொண்டால் சமீபத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது ட்விட்டர் மூலமாக தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இது அதிமுக வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய நிலையில், அது தன்னுடைய கணக்கு அல்ல, போலியானது என்று உதயக்குமார் விளக்கமளித்தார். இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காகவே பிரபலங்களின் உண்மையான கணக்குகளை பரிசோதனை செய்து புளூ டிக் அந்தஸ்தை ட்விட்டர் சமூக வலைத்தளம் வழங்கிவருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநில முதல்வர்களின் ட்விட்டர் கணக்குகள் இவ்வாறு அதிகாரப்பூர்வ கணக்குகளாக இருந்துவருகின்றன. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு ‘வெரிபைட்’ அந்தஸ்து பெறாமலேயே இருந்துவந்தது. இதனால் அவர் பெயரில் பல்வேறு போலி கணக்குகள் முளைத்தன. இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாவது எப்போது என்ற கட்டுரையையும் வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் கணக்கிற்கு தற்போது வெரிபைடு அந்தஸ்து கிடைத்துள்ளது. ட்விட்டர் நிறுவனம், புளூ டிக் வழங்கி இதனை உறுதி செய்துள்ளது. வெறும் புளூ டிக் பெற்றதும் நிறுத்திக்கொள்ளாமல் அதன் மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவது, தீர்த்துவைப்பது என மக்களுயுடன் அவர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையில், இந்தியாவில் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகர போலீஸார் தங்களின் அதிகாரபூர்வச் சமூக வலைதளக் கணக்குகள் மூலம் மக்களுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவிவரும் நிலையில், தமிழக போலீஸார் இன்னும் பின்தங்கியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியிருந்தோம். தமிழக காவல்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளும் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு மக்களின் குறைகளைத் தீர்த்துவைக்க வேண்டும் என்பதே ‘இணைய’தலைமுறையினர் விருப்பம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018