பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து 13 பேர் பலி!


மகாராஷ்டிராவில் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் பயணம் செய்த சிற்றுந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் கடற்கரை நகரமான ரத்னகிரியில் இருந்து கோலாப்பூர் நோக்கி நேற்று நள்ளிரவில் சிற்றுந்து வந்துகொண்டிருந்தது. அதில் புனேயைச் சேர்ந்த 16 பேர் பயணம் செய்தனர். நேற்றிரவு 11.45 மணியளவில் சிவாஜி பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த சிற்றுந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பஞ்சகங்கா ஆற்றுக்குள் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். ஒன்பது மாத குழந்தை உள்பட மூன்று ஆண்கள், மூன்று பெண்களும் ஏழு குழந்தைகளும் உயிரிழந்தனர்.