மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பொறியியல் மாணவர்களுக்கு வேத, புராணத்தையும் கற்பிக்க வேண்டும்!

பொறியியல் மாணவர்களுக்கு வேத, புராணத்தையும் கற்பிக்க வேண்டும்!

‘தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில், பொறியியல் மாணவர்கள் துறை சார்ந்த பாடத்திட்டம் மட்டுமல்லாமல் வேதங்கள், புராணங்கள் மற்றும் தர்கா சாஸ்திரம் போன்றவையும் படிக்கும் வகையில் மாதிரி பாடத்திட்டம் ஒன்றைப் பரிந்துரை செய்துள்ளது’ என ஹிந்துஸ்தான் டைம்ஸ் வியாழக்கிழமை (ஜனவரி 24) செய்தி வெளியிட்டிருந்தது.

“இந்த மாதிரியான பாடத்திட்டங்கள், நிறுவனங்கள் தங்கள் சொந்த பாடத்திட்டத்தைத் திருத்தி அமைக்கும்போது, ஒரு வழிகாட்டியாக இருக்கும். மாதிரி பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனமும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதுவே மாணவர்களின் உரிமை” என மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

யோகா மற்றும் இந்தியாவின் நவீன விஞ்ஞானத்தை அல்லாமல், இந்தியப் பாரம்பர்யத்தின் சாராம்சம் மாணவர்களுக்கு இந்திய தத்துவத்தையும், மொழியியலையும் கற்பிக்கும். புதிய பாடத்திட்டம் நடைமுறை அறிவு மற்றும் ஆய்வக வேலைகளில் அதிக முக்கியத்துவம் தருகிறது. முதற்கட்ட பயிற்சிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பொறியியல் மாணவர்கள் தொழில் மற்றும் சமுதாயத்தின் தேவைகளை இணைப்பதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018