மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

நீந்துவதைத் தவிர்த்து நடந்து செல்லும் மீன்!

நீந்துவதைத் தவிர்த்து நடந்து செல்லும் மீன்!

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியன் கடற்கரை பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் புதியவகை மீன்களை கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் (IMAS) இன்ஸ்டிடுட் ஃபார் மெரைன் அண்ட் அண்டார்டிக் ஸ்டடிஸ் மற்றும் சிட்டி சயின்ஸ் ப்ரொஜெக்ட் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் புதிய வகை மீன்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரெட் ஹேன்ட்பிஷ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை மீன்கள் நீந்துவதற்கு பதிலாக கடலின் தரைப்பகுதியில் நடந்து செல்கின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 மீன்கள் இந்த புதிய வகையில் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டும் வசித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். டாஸ்மேனியன் கடற்கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர் இரண்டு டென்னிஸ் கோர்ட் அளவிற்கு இந்த உயிரினம் வாழ்ந்து வருவதாகவும், இதற்காக தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இரவு பகல் பாராது தொடர்ச்சியாக 7 ஆராய்ச்சியாளர்கள் நீருக்கடியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து Dr. ஸ்டுவர்ட் ஸ்மித் பேசும்பொழுது கடந்த 2007ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் க்ரஹாம் எட்கர் பல்வேறு புதிய கடல்வாழ் உயிரினங்களை கண்டறிந்திருந்தார். அதில் இதுபோன்ற ஒன்றினை அதிக எண்ணிக்கையில் காண்பது மன நிறைவாக உள்ளது. கடந்த 10 வருடங்களாக இதுபோன்ற உயிரினம் கண்டறியப்படவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என தெரிவித்தார்.

நீந்தும் மீன்கள் பல இந்த உலகில் வசித்து வரும் நிலையில் நடந்து செல்லும் புதியவகை மீன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018