தினம் ஒரு சிந்தனை: வாசிப்பு!


சிறந்த வாசிப்புக்கேற்றதை எழுதுங்கள் அல்லது சிறந்த எழுத்துக்கேற்றதை செய்யுங்கள்.
- பெஞ்சமின் பிராங்கிளின் (ஜனவரி 17, 1706 – ஏப்ரல் 17, 1790). இவர் ஓர் அரசியல் தலைவர் மட்டுமல்லர், ஓர் எழுத்தாளர், அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் ஆவார். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்றவர். மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளைச் செய்து இடி தாங்கியையும், வெள்ளெழுத்துக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்தவர். அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் ஒன்றில் பெஞ்சமின் பிராங்கிளினின் படம் இடம்பெற்றிருந்தது.