மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

இறுதிப் போட்டியில் இந்திய வீரர்!

இறுதிப் போட்டியில் இந்திய வீரர்!

இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய வீரர் ரோஹன் போபன்னா மற்றும் ஹங்கேரி நாட்டு வீராங்கனை டைம் பேபாஸ் ஜோடி நேற்று (ஜனவரி 26) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மார்செல்லோ டீமொலினர் மற்றும் மரியா ஜோஸ் ஜோடியுடன் மோதியது.

இதுவரை போபன்னா ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரின் லீக் சுற்றில் வெளியேறிவிடுவார். முதன்முறையாக அரையிறுதி வாய்ப்பைப் பெற்றதால் அதைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே, முதல் செட்டில் 7-5 என போபன்னா, டைம் பேபாஸ் ஜோடி கைப்பற்றியது. ஆனால், இரண்டாவது செட்டில் கடுமையாகப் போராடிய இரு அணிகளும் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் விளையாடினர். எனவே, இறுதிவரை சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக இந்த செட் இருந்தது. ஆனால், இந்த இரண்டாவது செட்டில் போபன்னா, டைம் பேபாஸ் ஜோடி 5-7 என தோல்வியைத் தழுவியது.

வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் தொடர்க்கம் முதலே டீமொலினர் மற்றும் மரியா ஜோஸ் ஜோடி முன்னிலை பெற்றது. அதை முறியடித்து போபன்னா, டைம் பேபாஸ் இருவரும் சிறப்பாக விளையாடி மூன்றாவது செட்டை 10-6 எனக் கைப்பற்றினர். இதனால் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்த ஜோடி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் டைம் பேபாஸ் மற்றும் மல்டேநோவிக் ஜோடி கோப்பையை தட்டிச் சென்றது. டைம் பேபாஸ் ஏற்கெனவே ஒரு கோப்பையைக் கைப்பற்றி உள்ளார் என்பதால் இந்தக் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018