மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ரஜினியைச் சந்தித்த செ.கு.தமிழரசன்

ரஜினியைச் சந்தித்த செ.கு.தமிழரசன்

புதிய கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, இந்தியக் குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் நேற்று சந்தித்துப் பேசினார்.

நேற்று (ஜனவரி 26) சென்னை போயஸ் கார்டனிலுள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில், அவரை இந்தியக் குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் சந்தித்துப் பேசினார். சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசன், “தமிழக அரசியலின் தற்போதைய சூழல், அடித்தட்டு மக்களின் பிரச்னைகள் குறித்தும் விவாதித்தோம். அதை அவர் கேட்டுத் தெரிந்து கொண்டதோடு தெரிந்தும் வைத்துள்ளார். தன்னுடைய உயர்வுக்கு காரணமான கிராமப்புற மக்களுக்கு உழைத்திட வேண்டும் என்ற எண்ணம் ரஜினி மனதில் மேலோங்கி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 27 ஜன 2018