மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ஆளுநர் தேநீர் விருந்து!

ஆளுநர் தேநீர் விருந்து!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் 69ஆவது குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் சென்னை மெரினாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கொடியேற்றினர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏக்கள், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உட்பட பல்வேறு விஐபிக்கள் கலந்துகொண்டனர். இதில் நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி போன்றவையும் நடைபெற்றன.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018