கிச்சன் கீர்த்தனா: சுவையான பச்சை மிளகாய் சட்னி!

தேவையான பொருள்கள்:
பச்சை மிளகாய் 4 - 7, சின்ன வெங்காயம் என்றால் 4 - 6, பெரிய வெங்காயம் என்றால் பாதி அளவு, இஞ்சி துண்டு சிறிதளவு, புதினா இலை 3 - 5, தேங்காய் பாதி அளவு, உப்பு சிறிதளவு, எலுமிச்சைப் பழம் பாதி.
செய்முறை:
மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் மிக்ஸியில் போடவும். தேங்காயை மாத்திரம் சிறு துண்டாகவோ அல்லது துருவியோ போடவும். எலுமிச்சைப் பழம் பாதியையும் பிழிந்து மிக்ஸியில் சேர்க்கவும். புளியையும் அத்துடன் சிறிதளவு தண்ணீரும் விடவும். மிக்ஸியை மூடிவிட்டு நன்றாக அடிக்கவும். மிக்ஸியில் அடிக்கும்போது நன்றாக அடிபட்டு களிப்பதமாகவோ அல்லது கட்டியாகவோ இருந்தால் தேவையான அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, மீண்டும் நன்றாக அடித்துவிட்டு சுவை பார்த்து இறக்கிக் கொள்ளலாம்.
உங்கள் வாய் சுவைக்குத் தகுந்த மாதிரி மிளகாயோ, உப்போ, எலுமிச்சம் புளியோ, இஞ்சியோ சேர்த்துக்கொள்ளலாம். இந்த முறையில் ஒரு தடவை செய்து பார்த்து அடுத்த தடவை செய்யும்போது உங்கள் சுவைக்கு ஏற்றாற்போல் தேவையானவற்றை சேர்த்தோ அல்லது நீக்கியோ செய்து கொள்ளலாம். சட்னியை மிக்சிஸில் இருந்து இறக்கியதும் வெங்காயம், கடுகு, பெருஞ்சீரகம் கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து தாளித்துப்போட்டு கலந்து பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும்.
கீர்த்தனா சிந்தனைகள்: