மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

இலங்கை மசோதா: விரைவில் நடவடிக்கை!

இலங்கை மசோதா: விரைவில் நடவடிக்கை!

‘தமிழக மீனவர்களைப் பாதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி திருத்த மசோதா குறித்து ஆலோசனை செய்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மீன்வளத் துறை சட்டத் திருத்த மசோதா, கடந்த 24ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலமாக, இலங்கை கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டிய அபாயமும் உருவாகியுள்ளது. அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 25) இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. புதிய சட்டத்தை இலங்கை அரசு அமல்படுத்தாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இலங்கை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டுமென்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018