மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கேரளாவைச் சேர்ந்த பெண் பிறந்து நான்கு நாள்களே ஆன தன்னுடைய குழந்தையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்தது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்கத் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘இது மனித உரிமை மீறல் மற்றும் தத்தெடுப்பு மீதான சட்டரீதியான விதிமுறைகளை மீறுகிறது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் ஒரு நாகரிக சமூகத்தில் அனுமதிக்கப்பட முடியாது’ என மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் குழந்தையை தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கு விற்றதாகச் சமீபத்தில் பிரபல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்துள்ளது. இந்த செய்தி தொடர்பாகவும், இதற்குமுன் இதுபோன்று நிகழ்ந்த மற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி, கேரள அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி மற்றும் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்நலத் துறை அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோருக்குத் தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று (ஜனவரி 26) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஆறு வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வறுமை மற்றும் விழிப்புணர்வு இல்லாமை காரணமாக ஏழை மக்கள் தங்கள் சொந்த குழந்தைகளை விற்கும் நிலைக்குச் செல்கின்றனர் என்பதை இந்தச் செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனவரி 25, 2018 ஊடக அறிக்கையின்படி, சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஒரு குடும்பத்திடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டதாக அந்த குழந்தையின் தாயார் பக்கத்து வீட்டாரிடம் கூறியுள்ளார். இந்த குழந்தையை விற்பதன் மூலம் கிடைப்பதன் பணத்தைக் கொண்டு அடுத்துள்ள நான்கு குழந்தைகளை வளர்க்க உதவும் என தன்னுடைய கணவரும், மாமியாரும் கூறியதால், அதற்கு நான் ஒப்புக்கொண்டேன் என குழந்தையின் தாய் கூறினார்.

அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு, போலீஸில் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தந்தை மற்றும் பாட்டியைத் தேடி வருகின்றனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018