மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

வாழுகின்ற வார்த்தைகள் Vs வீழுகின்ற வார்த்தைகள்.

மருத்துவர் ஒரு பெண்மணிக்குச் சில மருந்துகளை பரிந்துரைத்துவிட்டு, “நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும்” என்றார்.

“எவ்வளவு காலம் டாக்டர்... நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?” என்று கேட்கிறார் அந்தப் பெண்மணி.

டாக்டர், “நீங்கள் வாழும் வரை” என்கிறார்.

சாகும் வரை, வாழும் வரை என்ற இரு வாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் சாகும் வரை என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் எதிர்மறை எண்ணம் எழுகிறது. ஆனால் வாழும் வரை என்ற சொற்களில் ஆறுதல் தரும் நேர்மறை எண்ணம் ஏற்படுகிறது.

சொற்களில் என்ன இருக்கிறது... அது புரிந்துகொள்வதில்தானே இருக்கிறது என்று வாதாடலாம். ஆனால், சில வார்த்தைகள் ரணப்படுத்தும். சில வார்த்தைகள் குணப்படுத்தும்.

அடுத்தவரை ஊக்குவிக்கும் வார்த்தைகளாகப் பேசலாம்.

அடுத்தவரை சோர்ந்துபோக செய்யும் வார்த்தைகளைத் தவிர்க்கலாம்.

Every word has its power choose them carefully.

உடலுக்கு Insulin எவ்வளவு முக்கியமோ, மனதுக்கு இன்சொல்லும் அவ்வளவு முக்கியம். காலை வணக்கம் அன்பர்களே!

என்னய்யா இது இன்சுலின், பிபி, சுகரெல்லாம் வெச்சி பஞ்ச் போட்டு முடிக்கிறீங்க... பொன்மொழியெல்லாம் சொல்றீங்க.

எல்லாம் கார்ப்பரேட் சதி.

சுகர் அளவை நிர்ணயிச்சதே ஒரு கூட்டம் எல்லாம் மாத்திரை மருந்தை வாங்க வைக்கறதுக்குன்னு சொல்லிட்டு இருக்காங்க.

இந்தப்பக்க இயற்கை மருந்தாம், அந்தப்பக்கம் யோகா, சித்தா, ஆயுர்வேதா மருந்தாம், மற்றொருபக்கம் சைனீஸ் மருத்துவமாம்.

உஸ்ஸ்ஸ்...

என்னய்யா இது கடைசில ஒரு பஞ்ச் டயலாக்கைப் போட்டு சொல்ல வந்த கருத்தோட சாராம்சத்தையே மாத்தி புட்டீங்களேய்யா...

குட் நைட்.

ஓ இது காலைலயா...

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 27 ஜன 2018