மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

எப்போது தீரும் வேலையில்லாத் திண்டாட்டம்?

எப்போது தீரும் வேலையில்லாத் திண்டாட்டம்?

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் திட்டமிட்டதைவிட அதிகரித்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வேலையின்மை 2018ஆம் ஆண்டில் 3.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 'வேர்ல்ட் எம்பிளாய்மென்ட் அண்ட் சோசியல் அவுட்லுக்: ட்ரெண்ட்ஸ் 2018' என்ற தலைப்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. முன்னதாக 2017ஆம் ஆண்டு இதே அமைப்பு, 2017-2018ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 3.4 சதவிகிதமாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 'இந்தியாவில் 2017ஆம் ஆண்டு 1.83 கோடியாக இருந்த வேலையின்மை எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 1.86 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு கணக்கிடப்பட்ட எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும். மேலும், இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 1.89 கோடியாக உயர வாய்ப்புள்ளது'.

அதிகரித்துவரும் தானியங்கி மயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் வேலையின்மை மோசமான நிலையை எட்டியுள்ளது. இதைச் சமாளிக்க மத்திய அரசு முத்ரா யோஜனா, ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவை வேலைவாய்ப்பு உருவாவதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும், வேலையின்மை பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசிடமிருந்து இன்னும் நிறைய திட்டங்கள் தேவைப்படுகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 27 ஜன 2018