மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

காக்கியில் களமிறங்கிய கதிர்

காக்கியில் களமிறங்கிய கதிர்

இளம் நடிகர்களில், கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி பல படங்களில் நடித்துவரும் கதிர், அடுத்ததாக காக்கி உடையில் கலக்கவிருக்கும் ‘சத்ரு’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மதயானைக் கூட்டம், கிருமி, விக்ரம் வேதா ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கதிர், திருநங்கையாக நடித்திருக்கும் ‘சிகை’ திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இந்த நிலையில் ஆக் ஷன் ஹீரோவாக தன்னை நிரூபிக்கும் வகையில் சத்ரு படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையாக அமைத்து ஆக் ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன். தவறு செய்கிறவர்களுக்குச் சட்டம் தராத தண்டனையை ஒரு தனி மனிதன் தர முற்படும் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இந்த மோஷன் போஸ்டர் மூலம் ராயபுரம் காவல்துறை அதிகாரியாக கதிர் நடித்திருக்கிறார் எனத் தெரிகிறது. மேலும், அவரது கையில் உள்ள சிலேட்டில் ஒரு நபரின் பெயர், வயது, உயரம் ஆகியவை அடங்கிய குறிப்பு இருக்கிறது. அது அவரைப் பற்றிய குறிப்பா அல்லது தேடப்படும் குற்றவாளியைப் பற்றிய குறிப்பா என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

கதிருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வருணீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு அம்ரிஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றுள்ளது. ராஜரத்தினம் - ஸ்ரீதரன் இருவரும் இணைந்து படத்தை தயாரித்திருக்கின்றனர்.

சத்ரு மோஷன் போஸ்டர்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 27 ஜன 2018