மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

நிலக்கடலை கொள்முதலுக்கு அனுமதி!

நிலக்கடலை கொள்முதலுக்கு அனுமதி!

கூடுதலாக 4 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையைக் கொள்முதல் செய்வதற்கு குஜராத் மாநில அரசு விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த ஆண்டின் நிலக்கடலை உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால் விலைக் குறைவு மற்றும் விலைச் சரிவு ஏற்படாமல் இருக்க 253 மையங்கள் வாயிலாக நிலக்கடலை கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரையில் மொத்தம் 8 லட்சம் டன் அளவிலான நிலக்கடலை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 4 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் குஜராத் மாநில அரசு சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்திருந்தது.

இந்த நிலையில் 1 லட்சம் டன் அளவிலான நிலக்கடலையைக் கூடுதலாகக் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. குஜராத் மாநில வேளாண்துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு இதுபற்றி கூறுகையில், “மத்திய வேளாண் துறை அமைச்சகம் 4 லட்சம் டன் அளவிலான நிலக்கடலை கொள்முதல் செய்ய அனுமதியளித்துள்ளது. இதுவரையில் 8 லட்சம் டன் நிலக்கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு லட்சம் டன் நிலக்கடலை கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படவுள்ளது. புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் நிலக்கடலை, தனியார் சேமிப்புக் கிடங்குகள் வாடகைக்கு எடுக்கப்பட்டுச் சேமித்து வைக்கப்படும். ஜனவரி 22ஆம் தேதி கொள்முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் விரைவில் மாநிலம் முழுவதும் கொள்முதல் தொடங்கும். இதன்மூலம் பெரும் எண்ணிக்கையிலான சிறு விவசாயிகள் பயனடைவர்” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018