மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

பியூட்டி ப்ரியா: ஆணிக்கால் வந்தால் அழகு குறையுமா?

பியூட்டி ப்ரியா: ஆணிக்கால் வந்தால் அழகு குறையுமா?

பாதங்களுக்கு எல்லா இடங்களிலும் அழுத்தம் கிடைக்காமல், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அழுத்தம் அதிகமாக ஏற்படும்போதுதான் ஆணிக்கால் உருவாகிறது. சிலருக்கு நடப்பதிலும் மாற்றம் ஏற்பட்டு, அப்பட்டமாக காட்டிக்கொடுத்து விடுகிறது அல்லது பொது இடங்களில் கால் மேல் கால் போட்டு அமர சங்கோஜப்படும் நிலையும் ஏற்படுகிறது.

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஆணிக்கால் உருவாகும் வாய்ப்பு அதிகம். பாதத்தில் இருக்கும் கொழுப்பு நகர்வதால் பாதத்தின் வடிவம் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறிது மாறும். இதனால் பாதத்தின் எலும்புக்கும் தரைக்கும் நடுவில் உள்ள தோல் மாட்டிக்கொண்டு தடிமனாகிவிடும். இதுதான் ஆணிக்காலாக மாறுகிறது.

இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆணிக் காலுக்கும் சதைக்கும் இடையில் உராய்வு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது நாளடைவில் வெளியில் தெரியாத புண்ணாகவும் மாறலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பிலும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையை இந்த உள் புண் உண்டாக்கிவிடும். அதனால், ஆணிக்காலைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது.

ஆணிக்காலுக்கு மருத்துவரிடம் தகுந்த சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். தெருக்களில் ஆணி எடுக்கப்படும் என்று வருபவர்கள் தரம் குறைந்த முறையில் எடுப்பர். இவர்களிடம் சென்று மிகவும் குறைந்த செலவாக இருக்கிறதே அவசரப்பட்டு காலை காண்பிக்கக் கூடாது மிகுந்த எச்சரிக்கை தேவை.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 27 ஜன 2018