மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 ஜன 2018

ஹெல்த் ஹேமா: கொத்தமல்லி சாப்பிடுங்க... குதூகலமா இருங்க!

ஹெல்த் ஹேமா: கொத்தமல்லி சாப்பிடுங்க... குதூகலமா இருங்க!

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தும் பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி பயன்படுகின்றன. கொத்தமல்லி, உடல்நலத்துக்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையும் ஆகும்.

இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் என்றே கூறலாம்.

கொத்தமல்லியின் மகத்துவங்கள்:

கொத்தமல்லியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன.

சருமத்தில் படை நோய் இருந்தால், கொத்தமல்லியை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவினால், சரும பிரச்னைகள் குணமாகும். கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலை சுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.

கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கும். கொத்தமல்லியில் லினோலிக் அமிலம் (Linoleic acid), அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) போன்றவை நிறைந்துள்ளதால், இது கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 27 ஜன 2018