மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பேரறிவாளன் விடுதலை?

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பேரறிவாளன் விடுதலை?

எடப்பாடி திடீர் ஆலோசனை

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யலாமா என திடீர் ஆலோசனை நடத்தத் தொடங்கிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வரான பன்னீர்செல்வத்திடம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்தால் நல்லது என நினைக்கிறேன். இது சம்பந்தமாக பேச அதிகாரிகள் சிலரை வரச் சொல்லி இருக்கிறேன். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அவர்களை விடுதலை செய்தால், மக்களிடம் நல்ல பேரு கிடைக்கும்...’ என சொன்னாராம். அதன் பிறகு சில அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் இதுபற்றி முதல்வர் பேசி இருக்கிறார்.

முதல்வரிடம் பேசிய அதிகாரிகளோ, ‘இதற்கு முன்பாக முதல்வர்களாக இருந்த கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இப்படியான ஒரு முடிவை யோசிக்கக் கூட இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்திருக்க முடியும். பேரறிவாளனை பரோலில் விடக் கூட அவர்கள் தைரியமான முடிவை எடுக்கவில்லை. காரணம், அவர்களுக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால், நீங்கள் அதையெல்லாம் உடைத்து, பேரறிவாளனை பரோலில் வர அனுமதி கொடுத்தீங்க. அதுவே உங்க மீதான மரியாதையை பல மடங்கு உயர்த்தியது. உங்களைப் போன்ற ஒரு எளிமையான முதல்வரால் மட்டுமே இது சாத்தியமாகும்’ என்று அதிகாரிகள் வட்டாரத்தில் அப்போதே பேசினோம்.

இப்போது பேரறிவாளன் உள்ளிட்டவர்களை நீங்கள் விடுதலை செய்து உத்தரவிட்டால், சில எதிர்ப்புகள் வந்தாலும், வரவேற்பு என்பது பெரிதாக இருக்கும். வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடிய சம்பவமாக அது மாறும். ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ இருந்த நெருக்கடி உங்களுக்கு இல்லை. அதனால், நீங்கள் தைரியமாக இந்த முடிவை எடுக்கலாம். அந்த வகையில் நீங்கள் விடுதலை செய்யும் பட்சத்தில், அது அரசியல் சாசன சர்ச்சையாக உருவெடுத்தாலும் அடுத்து வரப்போகும் தேர்தலில் உங்களுக்கான செல்வாக்கு கிராஃப் என்பது ஏறு முகத்தில் இருக்கும்.’ என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு முதல்வர், ‘இதனால் எனக்கு பல சிக்கல் வரும் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நீங்க சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்க்கும் போது, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பேரறிவாளன் உள்ளிட்ட எல்லோரையும் விடுதலை செய்ய முடியவில்லை என்றாலும், பேரறிவாளனை மட்டுமாவது விடுதலை செய்யலாமா என யோசிக்கிறேன். நானும் துணை முதல்வரும் இது சம்பந்தமா பேசுறோம். நிச்சயம் நல்ல முடிவாக எடுக்கிறோம்’ என சொன்னாராம்.

அதனால், இப்போதைய நிலவரப்படி உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் தயாராகிவிட்டார் என்றே அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018