மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மணிகண்டன் இறப்பு : போராட்டத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள்!

மணிகண்டன் இறப்பு : போராட்டத்தில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள்!

போலீசார் தரக்குறைவாக பேசியதாக கூறி தீக்குளித்த மணிகண்டன் உயிரிழந்ததைத் தொடர்ந்து கால் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி போக்குவரத்து போலீசார் கால் டாக்ஸி ஓட்டுநர் மணிகண்டனை தரக்குறைவாக பேசியுள்ளனர். பொது மக்கள் மத்தியிலே இவ்வாறு பேசியதால் மனமுடைந்த அவர் தீக்குளித்தார். கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

இவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டும், போக்குவரத்து போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மணிகண்டனின் குடும்பத்தினருடன் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து போலீசார் இதுபோன்று அடிக்கடி வரம்பு மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மணிகண்டனை தாக்கியதாக கூறப்படும் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன், “விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018