மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

பிரியங்காவுக்கு உத்தரவிட்ட வருமான வரித் துறை!

பிரியங்காவுக்கு உத்தரவிட்ட வருமான வரித் துறை!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய விலையுயர்ந்த கார் மற்றும் கைக்கடிகாரத்துக்கு வரி செலுத்த வேண்டுமென்று வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ், இந்தி படங்களில் மட்டுமல்லாமல் பே வாட்ச் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2011ஆம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனையில், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரம், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றுக்கு வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றுக்கு வரி செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவற்றிற்கு வரி செலுத்த மறுத்த பிரியங்கா, அவை தனக்கான பரிசுகள் என்பதால், தன்னுடைய வருமானத்திற்குக் கீழ் வராது, எனவே வரி செலுத்தத் தேவையில்லை என வாதிட்டார். இவர் கொடுத்துள்ள விளக்கத்தை ஏற்க மறுத்த வருமான வரித் துறை அதிகாரிகள், 7 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்படி காரும், கைக்கடிகாரமும் வருமானம் என்றே கருதப்படும் என்றும், எனவே, வரி செலுத்தியாக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பிரியங்கா சோப்ரா நடத்திவரும் ரெட் சில்லிஸ் சார்பில் அவருக்குக் கொடுக்கப்பட்ட 17லட்சம் மதிப்பிலான நகைக்கும் வருமான வரி கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018