மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

உடனடி தேர்தல்; பாஜக வெற்றி?

உடனடி தேர்தல்; பாஜக வெற்றி?

நாடாளுமன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட்டால் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 301 இடங்கள் கிடைக்குமென்று, ஏபிபி நியூஸ் – சிஎஸ்டிஎஸ் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சிக்காலம் வரும் 2019 மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வரும் நவம்பர் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு மாறாக, இந்த ஆண்டு மே மாதத்துக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாகச் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, இன்று மின்னம்பலம் மதிய பதிப்பில் செய்தி வெளியிடப்பட்டது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாகக் கிடைத்த வரவேற்பை முன்வைத்து, அடுத்த தேர்தலைச் சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதோடு, குஜராத்தில் காங்கிரஸ் பெற்ற ஏறுமுகம், நாடெங்கும் தொடர்ந்திடக்கூடாது என்றும் நினைக்கிறது. இதனால், இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்றாற்போல, உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் என்ன முடிவுகள் கிடைக்கும் என்று ஏபிபி நியூஸ் – சிஎஸ்டிஎஸ் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை நடத்தின.

இதற்காக 19 மாநிலங்களில், 75 நாடாளுமன்றத் தொகுதிகளில், 14.336 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதன் முடிவில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 301 (293-309) இடங்கள் கிடைக்குமென்று தெரிய வந்துள்ளது. இதேபோல, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 127 (122-132) இடங்கள் கிடைக்குமென்று, இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கான 272 இடங்களை பாஜக பெறுவது கடினம் என்று கூறியுள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தலின்போது, பாஜக 282 இடங்களுடன் அறுதிப் பெரும்பான்மை பெற்றது; காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தது. தென்னிந்தியாவில் மட்டும் தான், பாஜக கூட்டணிக்கு பெரியளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டில் பாஜகவினால் வெற்றி பெற முடியவில்லை; இந்த நிலை மேற்கு வங்காளத்திலும் கூட தொடர்கிறது.

இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கான வரவேற்பு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் திருப்தி, நாட்டை உலுக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. வேலைவாய்ப்புப் பிரச்சனை இந்தியாவில் மிக முக்கியமானதாக, எல்லா மாநிலத்தவராலும் பார்க்கப்படுவது இந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேபோல விலைவாசி உயர்வு, வறுமை, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, ஊழல் போன்ற பிரச்சனைகளால் தாங்கள் கடுமையாக அவதிப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர் கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள்.

கருத்துகணிப்பு முடிவுகளில் இருந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதாகவும், அதே வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கான வரவேற்பு பெருகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு, நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிய கட்சிகளின் பயணத்தை விரைவாக்கியுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018