மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

எப்படி இருந்தது இந்தியாவின் முதல் குடியரசு தினம்?

எப்படி இருந்தது இந்தியாவின்  முதல் குடியரசு தினம்?

நாடு முழுவதும் இன்று(ஜனவரி 26) 69வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்து வந்த 68 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. ஏன், இன்று குடியரசு தினம் கொண்டாடும் விதமும் மாறியுள்ளது. குடியரசு விழாவில் 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள்கலந்து கொண்டனர். நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் பிரம்மாண்டமான முறையில் அணிவகுப்புகள், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மோட்டார் சைக்கிளில் சாகச அணிவகுப்புகள், நவீன தொழில்நுட்பம் என பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

இதே நாளில் 1950 ஆம் ஆண்டில் இந்தியா அதிகாரப்பூர்வமாக குடியரசு ஆனது. முதல் குடியரசு தின விழா லண்டனில் எப்படி கொண்டாடப்பட்டது என்பதை குறித்து பார்க்கலாம்.

யூடியூப் சேனல் பிரிட்டிஷ் பதே ஒரு வீடியோ ஒன்று பகிர்ந்துள்ளது. அதில், இந்தியாவின் வரலாற்று நினைவுகள் இடம்பெற்றுள்ளன. டெல்லியின் கொண்டாட்டம் தவிர, லண்டனில் இங்கிலாந்தின் உயர் ஆணையர் வி.கே.கிருஷ்ண மேனன் லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் குடியரசு இந்தியா சார்பில் உறுதிமொழி ஏற்கும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அதில். “ நீண்ட காலத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது, எந்த தேசத்தில் வாழும் இந்தியரானாலும்,குடியரசின் குடிமகன் என்ற புதிய நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். சுதந்திரமாக வாழ தேவையான புதிய உரிமையை ஆண்களுக்கும் பெண்களுக்கு இது அளித்துள்ளது” என்று மேனன் கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018