மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

ஒருநாள் தொடரிலும் லுகிஷானி நிகிடி

ஒருநாள் தொடரிலும் லுகிஷானி நிகிடி

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தென்னாப்பிரிக்க அணி நேற்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. கடைசிப் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தற்போது நடைபெற்றுவருகிறது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது.

பிப்ரவரி 1 முதல் தொடங்கவிருக்கும் இந்தத் தொடரில் முதல் மூன்று ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியை நிலைகுலையச் செய்த இளம் வேகப்பந்து வீச்சாளர் லுகிஷானி நிகிடிக்கு வாய்ப்பு வழங்ககப்படுள்ளது. அவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது கிடையாது. 21 வயதான நிகிடி , வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்படுவாரா என்பது போட்டி தொடங்கும் பொழுது தெரியவரும்.

இந்திய அணிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு தேர்வான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சோண்டோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த முறை அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் விளையாடும் லெவனில் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர், ஏபி டிவிலியர்ஸ் ஆகியோர் இந்திய அணிக்கு கடும் சவாலாக அமைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைச் சமாளித்து இந்திய அணி ஒருநாள் போட்டிகளிலாவது வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் :

ஃப்ரான்ஸ்வா டூ ப்ளஸிஸ் (கேப்டன்), ஏபி டிவிலியர்ஸ், ஹஷிம் அம்லா, ஜே.பி. டுமினி, குவின்டன் டி காக், டேவிட் மில்லர், சோண்டோ, ஐடின் மார்கம், கிறிஸ்டோஃபர் மோரிஸ், மோர்னி மோர்க்கல், காகிசோ ரபடா, இம்ரான் தாஹிர், ஆண்டல் ஃபெலுக்வாயோ, லுகிஷானி நிகிடி, தப்ரைஸ் ஷாம்சி

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 26 ஜன 2018