மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்!

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள டி.எம்.எஸ். வளாகம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இன்று சுமார் 25 அடி நீளத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகளுக்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, சிமென்ட் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவரும் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகம் அருகே இன்று (ஜனவரி 26) திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் தடுப்புகள் இருந்த இடம் தரைக்குள் உள்ளிறங்கியது. 4 அடி அகலம், 25 அடி நீளத்துக்கு இந்தப் பள்ளம் நீண்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில் மேலாளர் அரவிந்த் ராய் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார். சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் எந்த சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் இந்தப் பள்ளத்தை மூடும் பணிகள் நடைபெற்றது. இந்தப் பள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018