குளோனிங்கில் குரங்குகள்!


குளோனிங் முறையில் குரங்கை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானக் குழுவினர், குளோனிங் முறையில் இரண்டு குரங்குகளை உருவாக்கியுள்ளனர். அவற்றுக்கு ஜோங் ஜோங் (8 வாரங்கள்), ஹூவா ஹூவா (6 வாரங்கள்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக குளோனிங் முறையில் ‘டாலி’ என்ற ஆடு உருவாக்கப்பட்டது. அதன் முறைகளைப் பின்பற்றியே குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாய் பிறந்த குரங்குகள் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குளோனிங் முறையில் மனித குழந்தைகளை உருவாக்குவது விரைவில் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த குளோனிங் குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளை எளிதாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.