மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

‘2.0’ டீசர்: தாமதத்திற்குக் காரணம்?

‘2.0’ டீசர்: தாமதத்திற்குக் காரணம்?

2.0 படத்தின் டீசர் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

எந்திரன் படத்தை அடுத்து ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் படம் 2.0. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்‌ஸன் கதாநாயகியாக நடிக்கிறார். எந்திரன் படத்தையடுத்து இந்தப் படம் அதிக ‘சிஜி’ வேலைகளால் உருவாகிவருகிறது. இதன் காரணமாகவே அறிவிக்கும் தேதியில் படத்தை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இந்தப் படத்தின் உறுதியான வெளியிட்டுத் தேதி அறிவிப்பு எப்போது வருமென ரசிகர்கள் எதிர்பார்த்தபோது கடந்த டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வில் ஏப்ரல் 14ஆம் தேதி படம் வெளிவருமென ரஜினி தெரிவித்தார். அடுத்ததாக படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வி எழுந்தபோது குடியரசு தின விழாவில் வெளியாகும் என்கிற தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் அனைவரும் குடியரசு தினத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்க, டீசருக்கு பதிலாக ஷங்கர் ட்விட்டரில் ஆஜராகி டீசர் வெளிவருவதில் தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018