மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

அடடே! இதுவல்லவோ அம்மாவின் ஆட்சி -அப்டேட் குமாரு

அடடே! இதுவல்லவோ அம்மாவின் ஆட்சி -அப்டேட் குமாரு

இது அம்மா ஆட்சி அம்மா ஆட்சின்னு மேடைக்கு மேடை பேசும்போதெல்லாம் நான் நம்பல.... கிட்டத்தட்ட 5 கிலோமீட்டருக்கு ஒரு பிளாட்பாரத்தையும், ஒரு மரத்தையும், ஒரு போஸ்ட் கம்பத்தையும்... அவ்வளவு ஏன் பப்ளிக் டாய்லெட் வாசலைக்கூட விட்டுவைக்காம பேனர் கட்டுனீங்கள்ல. அதைப்பாத்ததும்தான் இது முழு ஜெயலலிதா ஆட்சின்னு நம்பிக்கை வந்தது. ஆனா, முன்னாடியெல்லாம் குனிஞ்சு போற அளவுக்காவது இடம் விடுவீங்க. ஏன்னா, அதுதான் அடையாளமாவே இருந்தது. ஆனா, உங்களுக்கு குனிஞ்சு கால்ல விழுறவங்ககூட மேலயும் நம்பிக்கை இல்லாம அதுக்கும் அனுமதிக்கிறது இல்லை. சரி, இவ்வளவு டார்ச்சர் பண்ணிட்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்துல என்ன பேசுனீங்கன்னு பாத்தா, அரசு பேருந்துகள் மக்களுக்கு சொந்தமானவை. நிர்வாகம் பண்ணுவது மட்டுமே அரசின் வேலைன்னு முதல்வர் சொல்றார். அட, இதுகூட பரவால்ல சார். 50 பேர் கூட இல்லாத ஒரு கூட்டத்துல இதை அம்மாநிலத்தின் முதல்வர் சொல்றாருன்னா பாருங்களேன். சரி, நீங்க அப்டேட்டைப் படிங்க. நான் குடும்பத்தோட மவுண்ட்ரோடு வரைக்கும் சுற்றுலா போய்ட்டு வர்றேன். அங்கதான் ஏதோ அதிசய பள்ளம் உருவாகியிருக்குறதா, செல்லூர் பேரவைல போஸ்ட் போட்ருக்காய்ங்க. வர்ட்டா...

@senthilcp

டைரக்டர் சார்,டீசர் எப்போ விடுவீங்க?

சிஜி ஒர்க் இருக்கு

புரியல,டீசர் னா ஆல்ரெடி எடுத்து எடிட் பண்ண படத்துல இருந்து காட்சிகளை தொகுத்து போடறதுதானே?அதுக்கு தனியா சிஜி ஒர்க் எந்த ஊர்ல?

@musthafa_faizal

90% பெண்களுக்கு புருசனோட நண்பர்கள பிடிக்காது...

ஆனா 99% ஆண்களுக்கு மனைவியோட தோழிகள பிடிக்கும்...

இதுதான் ஆம்பள மனசு

பாசம் வைக்க மட்டுமே தெரியும்

அப்புராணிகள்.....

@devil_girlpriya

காதல் என்றால் என்ன என்று தெரியாதவனை காதலிப்பதும் தவறு தான்

@chandra_kalaS

ராஜா, சீமான், தமிழிசை, ரஜினி போன்றோர்களிடம் எல்லா பிரச்சனைக்கும் மைக்கை நீட்டுவது மகா முட்டாள்தனம்..

Yamuna Rajendran

எல்லோரிடமும் அன்பு செலுத்துவது என்பது சத்தியமேயில்லை. காரணகாரிய சிந்தை இன்னும் முகிழாத குழந்தைகளிடமும் கையறுநிலையிலுள்ள முதியோரிடமும் மாற்றுத் திறனாளிகளிடமும் பிராணிகளிடமும் தாவரங்களிடமும் மலர்களிடமும் இயற்கையிடமும்தான் நிபந்தனையற்ற அன்பு செலுத்தமுடியும். அன்பு என்பது முதன்மையான மரியாதை, பொறுப்பு என்பதன் அடிப்படையில்தான் செலுத்த முடியும். மரியாதையும் பொறுப்பும் இல்லாதவர்களிடம் அன்பு செலுத்த முடியாது. வரைமுறையற்ற அன்பு என்பது ஒரு மாயை.

@krishnaskyblue

'பத்மாவத்' திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

69வது குடியரசுதினம் கொண்டாடுறோம் இன்னும் நம்மனால ஒரு படத்தை கூட பாக்க முடியல

@HAJAMYDEENNKS

வங்காள மொழியில் உள்ள தேசிய கீதம் நாடு முழுக்க அதே மொழியில் பாடப்படுகிறது..அதற்காக மற்ற மொழிகள் குறைந்தது என அர்த்தமில்லை..அதுபோல குழப்பம் வரக்கூடாது என்பதற்காக குர்ஆனில் உள்ள அரபி மொழியில் உலகம் முழுவதும் முஸ்லீம்கள் தொழுகிறார்கள்..இதனால் எந்த மொழியும் தாழ்வானது என அர்த்தமில்லை!

@iqu_twiz

இதுவரை எந்த பெண்ணிடமும் நம்பர் கேட்டதில்லை

நான் கேட்டு எந்த பெண்ணும் கொடுக்காமல்

போனதில்லை

இவண்

ரீசார்ஜ் கடைகாரர்

@BlackyPriyan

கால்டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் உயிரிழப்புக்கு காரணமான ட்ராபிக் போலிஸ் தாமரைச்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

ஓர் உயிரழப்புக்கு காரணமானவருக்கு தண்டனை சஸ்பெண்ட் மட்டும் தானா ??

@Selvatwitz

கொடி இயற்றும் தினத்தன்று குடியரசு தினமா இல்ல சுதந்திர தினமா என்று தெரியாமலே சீருடையில் வந்ததது பள்ளிக்கு,

ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரையிலும் மிட்டாய் வாங்குவதற்காகவே

ராஜா மவன்

யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதத்துக்கு மரியாதை தரவேண்டும்- உதயநிதி

அதெல்லாம் சரி பாஸு.. உங்களுக்காச்சும் சுதந்திர தினம் என்னைக்குன்னு தெரியுமா?

@vishnut87

செந்தில்: அண்ணே எனக்கொரு டவுடடு

கவுண்டமணி: சொல்லுடா கோமுட்டிதலையா

செந்தில்: அறுவடை நாள்ல நன்றி சொல்ல பொங்கல் கொண்டாடறோம்

கவுண்டமணி: ஆமா

செந்தில்: அதே போல குடிகாரர் காசுல அரசு நடக்கறதால அரசாங்கம் குடியரசு தினம் கொண்டாடுதா

கவுண்டமணி: ?????

Thamizh Karikalan

1950 சனவரி 26ம் தேதிய பலம் 1947 ஆகஸ்டு 15ம் தேதியை போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்,அதே பணப்பெட்டிதான், அதே தராசுதான், அதே படிகள்தான், அதே சரக்குதான், அதே பித்தலாட்டம்தான். ஆனால் விலாசம் அதாவது 'டிரான்ஸ்வர்' செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடியரசு ஆட்சி என்ற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதே பலத்துடன், மேலும் அதே பாதுகாப்புடன் 26ம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது.

இந்த உண்மையை தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று சொல்ல கூடாது? உண்மையை எடுத்து சொல்ல நாம் ஏன் பயப்படவேண்டும்? அக்கிரமத்தை எடுத்து சொல்ல நமக்கேன் அச்சம்?

பெரியார் (விடுதலை -20.01.1950)

-லாக் ஆஃப்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018