மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

ஓகி:ஸ்டாலின் நிவாரணம்!

ஓகி:ஸ்டாலின் நிவாரணம்!

ஓகி புயலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் பணியை நிறுத்திவிட்ட தமிழக அரசு நிவாரணப் பணிகளிலும் அலட்சியம் காட்டுகிறது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

ஓகி புயலில் சிக்கி மாயமான 19 மீனவர்களின் குடும்பத்தினரை, கடலூர் மாவட்டம் ராசபேட்டையில் ஸ்டாலின் இன்று (ஜனவரி 26) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், "ஓகி புயல் மீட்புப் பணியில் இந்த அரசு முழுமையாகத் தோல்வியடைந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை எத்தனை மீனவர்கள் காணாமல்போயிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தைக்கூட 'குதிரை பேர' அரசு கண்டுபிடித்து வெளியிட முடியாத சூழ்நிலைதான் தொடர்கிறது” என்று விமர்சித்தார்.

புயல் காரணமாக கடலூரில் காணாமல் போன 23 மீனவர்களில், 19 பேரின் நிலை என்ன என்பதே தெரியாத சூழ்நிலை இருக்கிறது. அவர்களை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் குடும்பத்தினரை இதுவரை அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ வந்து சந்தித்து, ஆறுதல் சொல்லக்கூட அவர்களுக்கு மனமில்லை என்று குற்றம்சாட்டிய அவர், “காணாமல்போன மீனவர்களை இந்த அரசு உடனடியாகக் கண்டுபிடித்து, அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வெள்ளி 26 ஜன 2018