மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

குடியரசு தினம்: வழக்கம்போல் சொதப்பிய அதிகாரிகள்!

குடியரசு தினம்: வழக்கம்போல் சொதப்பிய  அதிகாரிகள்!

குடியரசு, சுதந்திர தினங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் கொடி ஏற்றிக் கொண்டாடுவது வழக்கம். அதுபோன்று தேசிய கீதத்தை தவறுதலாய் பாடுவது, கொடியை தலை கீழாய் ஏற்றுவது, அரை கம்பத்தில் ஏற்றுவது போன்ற சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

இந்த ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் 69ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். காவல்துறை துணை ஆய்வாளர் செல்வராஜ், காவல் நிலைய வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

அப்போது ஏற்றப்பட்ட கொடி தலைகீழாக இருந்ததை பார்த்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மீண்டும் கொடி கீழே இறக்கப்பட்டு சரி செய்து மீண்டும் ஏற்றப்பட்டது.

இதுபோன்று திருப்பூர் பல்லடத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. பல்லடம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றினார். அப்போது தேசியக் கொடி தலைகீழாக கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை கண்ட பேராசிரியர்கள் உடனே கொடியை மாற்றிக் கட்டி சீர் செய்து பிறகு ஏற்றினர்.

உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு சிறப்புரையாற்றிய அம்மாநில அடிப்படை மற்றும் உயர் கல்வி இணை அமைச்சர் சந்தீப் சிங் 59-வது குடியரசு தினம் எனக் கூறி சொதப்பினார்.

அலிகாரில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். விழாவில் அவர் பேசும்போது, "இன்று நாம் நமது நாட்டின் 59-வது குடியரசு தின விழாவை கொண்டாடுகிறோம்" எனக் கூறினார்.

லேசான சலசலப்பு ஏற்பட்ட நிலையில் தனது உரையைத் திருத்தி 69-வது குடியரசு தினம் எனக் குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தின் அட்ரோலி தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., இவர். கல்வித்துறையை சார்ந்த அமைச்சரே இந்தியாவின் குடியரசு தின ஆண்டை தவறாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது என கூறினார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 26 ஜன 2018