மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

கின்னஸ் சாதனை: ஜெயிக்கப்போவது யாரு?

கின்னஸ் சாதனை: ஜெயிக்கப்போவது யாரு?

கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடிப் படமான ஜெயிக்கப்போவது யாரு படத்தின் இசையை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார்.

டிட்டு புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் ஜெயிக்கபோவது யாரு. கதை, திரைக்கதை, வசனம், எழுதியுள்ள சக்தி ஸ்காட் இப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வந்தனா நடிக்கிறார். மேலும் ஆர்.பாண்டியராஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இசையை இசையமைப்பாளர் டி .இமான் இன்று (ஜனவரி 26) வெளியிட்டார்.

இப்படம் குறித்து இயக்குநரும் நடிகருமான சக்தி ஸ்காட் பேசும்போது, “கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடிப் படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ் லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐன்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் எனப் பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருக்கிறார்” என்றார்

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வெள்ளி 26 ஜன 2018