மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

நஷ்டத்தில் போக்குவரத்து; லாபத்தில் ரயில்வே!

நஷ்டத்தில் போக்குவரத்து; லாபத்தில் ரயில்வே!

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளதால் ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளதாக சென்னை கோட்ட ரயில்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 30 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

பேருந்துக் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டதையடுத்து, பெரும்பாலான மக்கள் ரயில்களில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணமும் அதிகரித்திருப்பதால், மக்கள் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகிறார்கள்.

இதன் காரணமாக சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் ரயிலில் பயணம் செய்யும் மக்கள் எண்ணிக்கை 7 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் மதுரை, திருவனந்தபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளும் ரயிலிலேயே அதிகம் பயணம் செய்கின்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 70 சதவீத பேருந்துகள் மிகவும் பழைய பேருந்துகளாக உள்ள நிலையில், பேருந்துக் கட்டணத்தை 70 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. பேருந்துப் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, ரயில் மற்றும் ஷேர் ஆட்டோ பயணத்திற்கு மாறியுள்ளார்கள்.

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் தினமும் சராசரியாக 2 கோடியே 10 லட்சம் பேர் பயணம் செய்ததால், தினமும் ரூ.20 கோடி வரை வசூலானது.

தற்போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு தினமும் சுமார் ரூ.35 கோடி முதல் ரூ.38 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினமும் ரூ.28 கோடி வரையே வசூலாகிறது. அதாவது அரசு எதிர்பார்த்ததைவிட தினமும் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை குறைவாகவே வசூலாகிறது.

பேருந்துப் பயணத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 85 லட்சமாகக் குறைந்துவிட்டது. பொதுமக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்வதால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 30 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018