மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

துப்பாக்கியுடன் வந்த 2 பேர் கைது!

துப்பாக்கியுடன் வந்த 2 பேர் கைது!

வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ரயிலில் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புழல் சிறையில் உள்ள ஒரு கைதி, அஸாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து சென்னை வரும் ரயிலில் இருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் வருவதாக தெரிவித்த தகவலின் பேரில் அவர்களை பிடிக்க வேப்பேரி காவல் ஆய்வாளர் வீராக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

குவஹாத்தி ரயில் சென்னைக்குள் நுழைவதற்கு முன்னதாக ஒரு ரயில் நிலையத்தில் தனிப்படை காவல்துறையினர் ஏறி, ரயிலில் இருந்தபடியே துப்பாக்கிகளுடன் வந்த நபர்களை கண்காணித்து வந்தனர். திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இறங்கியவர்கள் காவல்துறையினரின் கண்காணிப்பை அறிந்து, தப்பியோடினர். தப்பியோட முயன்ற அவர்கள் இருவரையும் தனிப்படை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 5 துப்பாக்கிகள் 25 ரவுண்டு தோட்டாக்கள், 4 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள், மற்றும் போதைப் பொருள் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பெரம்பூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பிரதீப் மற்றும் திருமங்கலம், நேரு நகரைச் சேர்ந்த கமல் என்று தெரியவந்தது.

மேற்குவங்க மாநிலம் மாண்டியத் என்ற இடத்தில் அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வாங்கிவந்ததும் தெரிய வந்தது. அவர்கள் கொண்டு வந்த துப்பாக்கிகள் காவல்துறையினர் பயன்படுத்தும் 9 எம்.எம். வகை துப்பாக்கிகள் என்றும் தெரியவந்தது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும், இருவரும் துபபாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ரயிலில் ஏறியது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018