மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

பத்ம விருது: முதல்வர் வாழ்த்து!

பத்ம விருது: முதல்வர் வாழ்த்து!

பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது, தொல்லியல் துறை ஆய்வாளர் ராமச்சந்திர நாகசாமிக்கு பத்ம பூஷண் விருது, யோகா வல்லுநர் நானம்மாள், கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், ஊர்வனவியல் ஆய்வாளர் ரோமுலசு விட்டேக்கர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் நேற்று ஜனவரி 25 அறிவிக்கப்பட்டன.

இவர்களுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இசை உலகின் தலைசிறந்த இசையமைப்பாளரான இளையராஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்ற இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொல்லியல் துறையில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமச்சந்திர நாகசாமிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நானம்மாள் என்பவர் தனது சிறுவயதிலிருந்தே யோகா கற்றுக்கொண்டவர். இவர் 600க்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இவருக்கு பத்மஸ்ரீ விருதும்; புகழ்பெற்ற கிராமிய இசைக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும்; பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் வழியைத் திறம்படச் செயல்படுத்திய மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருதும்; சென்னையில் பாம்புப் பண்ணை மற்றும் முதலைப் பண்ணையை நிறுவிய இந்தியாவின் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளர் ரோமுலசு விட்டேக்கருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்ததற்கு எனது வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018