மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை!

இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை!

ஏரிகளில் போதியளவு தண்ணீர் இருப்பதால், இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என மெட்ரோ வாட்டார் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெட்ரோ வாட்டார் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.257 டி.எம்.சி. இன்று காலை 4 ஏரிகளில் 4.869 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. இதன்மூலம், இந்தாண்டு தண்ணீர் தட்டுபட்டு இருக்காது.

35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 27.75 அடியாக பதிவானது. ஏரிகளில் தேவையான அளவு தண்ணீர் இருப்பதால்,சென்னையில் வீடுகளுக்கு மெட்ரோ வாட்டர் சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 810 மில்லியன் லிட்டர் வாட்டார் சப்ளை செய்யப்படுகிறது.

கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஒரு நாளைக்கு 7 ஆயிரம் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. தற்போது வீடுகளுக்கு குடிநீர் நேரடியாக சப்ளை செய்யப்படுவதால் லாரிகளின் எண்ணிக்கை 5,300 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018