மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

மெட்ரோ காட்டில் மழை!

மெட்ரோ காட்டில் மழை!

பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது பரங்கிமலை – நேரு பூங்கா, சின்னமலை – ஆலந்தூர் - விமான நிலையம், விமான நிலையம் – நேரு பூங்கா இடையே 15 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் வழக்கமாகத் தினமும் சுமார் 22,500 பேர் பயணம் செய்வார்கள். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் 30 சதவீதம் வரையில் அதிகரிக்கும்.

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. மாநகர சொகுசுப் பேருந்துக் கட்டணம் மெட்ரோ ரயில் கட்டணத்தை நெருங்கியுள்ளதால், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி, "அரசுப் பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 30 முதல் 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. மேலும், கூட்டத்தை அதிகரிக்கும் வகையில் நிர்வாகம் ஓவியக் கண்காட்சி, விற்பனைக் கண்காட்சி, நாட்டுப்புறக் கலை, இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வடபழனி, ஆலந்தூர், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் 3 நாட்கள் இசைத் திருவிழா இன்று (ஜனவரி 26ஆம் தேதி) தொடங்குகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 26 ஜன 2018