மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 ஜன 2018

காதல் ஓவியத்தால் வைரமுத்து வாழ்த்து!

காதல் ஓவியத்தால் வைரமுத்து வாழ்த்து!

பத்மவிபூஷண் விருது பெறும் இசையமைப்பாளர் இளையராஜவுக்கு கவிஞர் வைரமுத்து காதல் ஓவியம் பாடல் வரிகளால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிவருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று (ஜனவரி 25) வெளியிடப்பட்டது. இதில், 80க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பாரத் ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது. இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.

இதையடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த் போனிலும், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பலர் ட்விட்டரிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவிஞர் வைரமுத்துவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டதுடன், இளையராஜாவை பாராட்டும்போது இருவரும் இணைந்து பணிபுரிந்த காதல் ஓவியம் படத்தின் ‘பூவில் வண்டு கூடும் கண்டு’ பாடலில் இடம்பெறும் வரிகள் மூலம் பாராட்டியுள்ளார்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை,

“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்

கானம் சென்று தங்கும்

வாழும் லோகம் ஏழும் - உந்தன்

ராகம் சென்று ஆளும்

வாகை சூடும்”

என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்”

என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவைத் திரையுலகில் அறிமுகம் செய்ததே இளையராஜாதான். பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலமே இந்தக் கூட்டணி தொடங்கியது. அதன் பின்னர் 80களில் இந்த மூவர் கூட்டணியும் அற்புதமான பல பாடல்களைத் தந்தது. இளையராஜா, வைரமுத்து கூட்டணி பெரிதும் பேசப்பட்டது. ஆனால் பாரதிராஜாவால் இணைந்த இக்கூட்டணி அவரின் முதல் மரியாதை படத்தின்போது ஏற்பட்ட மன வருத்தங்களால் பிரிந்தது.

அப்போது பிரிந்த வைரமுத்துவும், இளையராஜாவும் இப்போதும் இணையவில்லை. தனித்தனியே இருவரும் பிரிந்தபோதும் தங்களது துறைகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வெள்ளி 26 ஜன 2018